×

மேலும் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜ்னா திட்டம் குறித்து தெகடவூரில் குரங்குகள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை கலெக்டர் அலுவலகத்தில் ேகாரிக்கை மனு

கரூர், அக். 1: கடவூரில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடவூர் இயற்கை கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கடவூரில் உள்ள உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி ஆகியவற்றில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன.பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை குரங்குகள் தின்று விடுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சம் மற்றும் பீதியில் உள்ளனர். மேலும் குரங்குகள் கடைவீதி பகுதியிலும் பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதே போல் கடவூரில் பாலவிடுதி, முள்ளிப்பாடி ஊராட்சி என மூன்று ஊராட்சிகளுக்கும் பொதுவாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அவசர கால சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் கரூர் அல்லது திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். எனவே கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.கடவூர் பகுதிக்கு 50 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மலைப்பாதை வழியாக மின்சாரம் வருவதால் மழைக்காலம் மற்றும் காற்று காலங்களில் மின்கம்பி மற்றும் கம்பங்கள் சாய்ந்து விடுவதால் மின்தடை பிரச்னை ஏற்பட்டு வருகிறது.இதனால் அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர். கடவூரில் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை.
எனவே கடவூரில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Collector ,Dekatavur ,Kaushal Yojna ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...